Tuesday, 8 January 2013

veettu kurippu

* ஊதுவத்திகளை ஏற்றுவதற்கு முன் நீரில் நனைத்து பின்பு காற்றில் உலரவிட்டு ஏற்றினால், அதிக மணமாகவும் இருக்கும் நன்றாகவும் எரியும். * பட்டுச் சேலைகளைத் துவைக்கும்போது அலசும் நீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து கொண்டால் சாயம் போகாது; மங்காது. பட்டுச் சேலையும் பளிச்சிடும்.
* வெள்ளிப்பாத்திரங்களில் கருமை படராமல் தடுக்க, அவற்றை அடுக்கி வைக்கும்போது இடையிடையே கற்பூர வில்லைகளையும் போட்டு வைக்க வேண்டும்.
* மருதாணியால் ஆடையில் ஏற்படும் கறைபோக, அதை வெதுவெதுப்பான பாலில் அரை மணி நேரம் ஊற வைத்து, பின் சோப் போட்டு அலசினால் கறை போய்விடும்.
* மேஜை ட்ராயரின் இரு ஓரங்களிலும் சிறிது மெழுகு அல்லது சோப்பைத் தட வினால் எப்போதும் சிரமமில்லாமல் திறந்து மூடலாம்.
* பூசணிக்காய் சாற்றில் தங்க நகைகளை ஊற வைத்து கழுவினால் அவை நன்றாகப் பளிச்சிடும்.
* தரையைத் துடைக்கும் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு துடைக்க, ஈக்கள் பறந்தோடும். தொந்தரவில்லாமல் துடைக்கலாம்.பச்சை மிளகாயை ஃப்ரசருக்குள் வைத்தால் இரண்டு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். ஒரு நிமிடம் தண்ணீரில் போட்டு வைத்து இதை பயன்படுத்தவும். இதே முறையில் தேங்காயையும் வைக்கலாம். 

ஒரு கோப்பை வினிகருடன் மூன்று கோப்பை தண்ணீரை கலந்து ஜன்னல்களை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம்.

துணிகளில் பட்ட எண்ணெய்‌க் கரையை நீக்க, முகத்திற்கு தடவும் பவுடரை கரை மேல் போடுங்கள். சிறிது நேரம் விட்டு எப்பொழுதும் போல் துணியை கழுவுங்கள். கரை காணாமல் போகும்.

கறியை விரைவாக சமைக்க, அத்துடன் சிறிதளவு மசித்த பப்பாளியை சேர்க்கவும். 

கீரையை சமைக்கும்போது பச்சை நிறம் மாறாமல் இருக்க ஒரு சிட்டிகை ஆப்பசோடாவை அல்லது பேக்கிங் சோடாவை சேர்க்கவும்.

கேஸ் ஸ்டவ்வை எளிதாக சுத்தம் செய்ய சிறிது சோடாவை அதன் மீது ஊற்றி சில நிமிடங்கள் விட்டு, அதன்பிறகு சுத்தம் செய்யவும். 

வெங்காயத்தை வெட்டியபிறகு உடனடியாக பயன்படுத்தி விடவும். வெங்காயம் கிருமிகளை உறிஞ்சும் ஆற்றல் கொண்டது. அரை மணி நேரத்திற்கு மேல் அதை வெளியில் வைக்க வேண்டாம். 

சமைக்கும் போது கீரை மற்றும் பச்சை காய்கறிகளின் நிறம் மாறாமல் இருக்க 2 சொட்டு எலுமிச்சை சாற்றை அதில் சேர்க்கவும். 

வெங்காயத்தை உறிக்கும் போது கண்களில் கண்ணீர் வராமல் இருக்க, உறிப்பதற்கு முன் 5 நிமிடங்களுக்கு வெங்காயத்தை தண்ணீரில் ஊற வைக்கவும். கண்ணீர் மிச்சமாகும்.

வெங்காயத்தை உறிக்கும்போது கண்கள் எரியாமல் இருக்க ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து அதன்பிறகு உறிக்கவும். கண்கள் எரியாது.

No comments:

Post a Comment