தனக்கு கிடைக்காதது
யாருக்கும் கிடைக்கக்கூடாது
என்று சிந்திக்கிறவன் சமூக விரோதியாகிறான்.
தனக்கு கிடைக்காதது
மற்றவர்களுக்காவது கிடைக்கட்டும்
என்று கருதுபவன் சமூக சீர்திருத்தவாதி யாகிறான்
*முட்டாள் கணவன் மனைவியிடம் வாயை மூடு என்பான்,
புத்திசாலிக் கணவனோ கண்ணே உன் உதடுகள் சேர்ந்திருந்தால்
நீ தேவதையாய் தெரிகிறாய் என்பான்
*ஓர் எறும்புக்கு முன்னால் எந்தத் தடைகளை நீங்கள் வைத்தாலும் அது அடியில் சென்றோ அல்லது மேலால் சென்றோ, அல்லது சுற்றிச் சென்றோ தடைகளை கடக்கும். கவனித்தப் பாருங்கள், தடைகளை உடைப்பதற்கு எறும்புகள் காலத்தை விரயம் செய்து அழியவில்லை. தடைகளை அங்கேயே விட்டு அவை முன்னேறுகின்றன.
எல்லாக் கஷ்டங்களிலும் எறும்பு தன்னால் முடிந்த எல்லாவற்றையுமே செய்து பார்க்கிறது. வெல்பவர்கள் தளர்வதில்லை ! தளர்பவர்கள் வெல்வதில்லை ! என்ற கொள்கைக்கு அது ஆதாரமாக இருக்கிறது.
அப்பாவும், மகளும் உணவு மேஜையில் உட்கார்ந்திருந்தார்கள்.
அம்மா சுட்டு வந்த தோசை தீய்ந்திருந்தது.
“நல்ல முறுகலா இருக்கே” என்று ரசித்துச் சாப்பிட்டார் அப்பா.
அடுத்த தோசை சுட அம்மா அடுக்களைக்கு போனதும், மகள் கேட்டாள்,
“அப்பா தோசை தீய்ந்து போயிருக்கிறது, முறுகல் என்கிறீர்களே?”.
அப்பா சொன்னார், “உன் அம்மாவுக்கு இன்று களைப்பாக இருந்திருக்கும்,
கவனக்குறைவால் நிகழ்ந்திருக்கும்.
ஒரு தோசை தீய்ந்து போனதை சுட்டிக்காட்டி அவள் மனம் தீய்ந்து போவதை நான் விரும்பவில்லை”.
அடுத்த தோசை நிஜமாகவே முறுகலாக வந்தது.
குறைகளை நிறைகளாய்க் கொள்ளும்போது குறைகள் தாமாகவே மறைகின்றன.

No comments:
Post a Comment