கொசுக்களினால் மனிதனுக்கு பரவும் கொடிய நோய்களுள் ஒன்று மலேரியா. இது `அனாபிலிஸ் கேம்பியே' என்ற பெண் கொசு மனிதனை கடிப்பதால் பரவுகிறது. உலகில் ஒரு வருடத்திற்கு 8 லட்சம் பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர் என்கிறது ஒரு ஆய்வு.
இந்த கொடிய நோய்க்கு காரணமான கொசுவின் உற்பத்தியை எப்படி தடுத்து நிறுத்தலாம் என்பது பற்றி லண்டனில் அண்மையில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. ஆய்வின் ஒரு பகுதியாக, இனப்பெருக்க சக்தி இல்லாத 100 ஆண் கொசுக்கள் ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்பட்டு, அவை பெண் கொசுக்களுடன் இனச்சேர்க்கைக்கு உட்படுத்தப்பட்டன.
அப்போது, பெண் கொசுக்கள் வழக்கம் போல், ஆய்வாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட ஆண் கொசுக்களுடன் ஒன்று கூடின. ஆனாலும், அந்த பெண் கொசுக்கள் கருத்தரிக்கவில்லை. இது பற்றி ஆய்வாளர்கள் கூறும்போது, `இனப்பெருக்க சக்தி இல்லாத ஆண் கொசுக்களை உற்பத்தி செய்து உலவ விட்டு, நோய் பரப்பும் கொசுக்களின் இனவிருத்தியை குறைத்து விட்டால் மலேரியா நோயை முற்றிலும் ஒழிக்க முடியும்' என்று தெரிவித்தனர்
No comments:
Post a Comment