Wednesday, 9 January 2013

JOKKES

ஒரு பெரிய பாக்டரி .. கிட்ட தட்ட 1000 பேருக்கு மேல வேலை பாக்குற கம்பெனி.. எல்லாம் நல்ல படியாதான் போய்கிட்டு இருந்துச்சி…
ஒரு நாள் அந்த முதலாளி பாக்டரி குள்ள ரௌண்ட்ஸ் வந்தாராம் … அப்போ ஒருத்தன் “மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது என்ன சுகம் ” அப்படின்னு படுத்து கிடந்தான் ..
அவருக்கு வந்தது பாரு கோபம்… இருந்தாலும் அடக்கிகிட்டு, அவன எழுப்பினார் .. “தம்பி நீ மாசம் எவ்வளவு சம்பளம் வாங்குற”? அப்படின்னு கேட்டாரு… அதுக்கு அவன் ஒன்னும் புரியாம முழிச்சிக்கிட்டு “மூவாயிரம் ருபாய் சார் “ அப்படின்னான்.
உடனே அவரு பைக்குள இருந்து பர்ச எடுத்து ஒரு பத்தாயிரம் ருபாய எடுத்து தூக்கி எரிஞ்சாறு … “இதுல உன்னோட மூணு மாச சம்பளத்துக்கு மேலே ஒரு ஆயிரம் ருபாய் அதிகமா இருக்கு .. நான் இங்க சும்மா படுத்து கிட்டு இருக்குரவனுக்கு சம்பளம் குடுக்க்ரதுக்கு இந்த பாக்டரிய நடத்தல..” அப்படின்னு சொன்னாரு..
அவன் ஒரு நிமிஷம் அவர குறு குருன்னு பார்த்தான் .. அப்புறம் அந்த பணத்த வாங்கிகிட்டு வேகமா வெளிய போய்ட்டான் … எல்லாரும் வாயடைச்சி போய் நின்னாங்க ..
அப்புறம் முதலாளி எல்லாரையும் கர்வமா பார்த்து … “இனிமே எல்லாம் அப்படி தான் ” (தமிழ் பட டயலாக் ) அப்படின்னாரு. அப்புறமா கணக்குபிள்ளய கூப்பிட்டு “யார்யா அவன் ??” அப்படின்னு கேட்டாரு…
அதுக்கு அந்த கணக்கு பிள்ளை சொன்னான் … ” டீ கொண்டு வந்த பையன் மொதலாளி ..

**************************************************************************
மிஸ்டர்.மொக்கையின் வாழ்க்கையில் கொஞ்சம் கஷ்டகாலம்..! 
கடவுளை உள்ளம் உருக வேண்டினார்.. "சாமி.. இந்த மாத குலுக்கலில் எனக்கே முதல் பரிசு விழணும்.. முதல் பரிசு அஞ்சு லட்சமாம்.. தயவு பண்ணுப்பா பகவானே..!"

குலுக்கல் நாள்.. வேறு யாருக்கோ பரிசு விழுந்து , மொக்கை ரொம்ப பீல் ஆயிட்டாரு.

அடுத்த மாத குலுக்கல் நேரம்.. மொக்கை இம்முறையும் ரொம்ப நம்பிக்கையா வேண்டிக்கிட்டார். ஆனால் பரிசென்னவோ மொக்கையின் பக்கத்து வீட்டுக் காரனுக்கு..!

"அடக் கடவுளே.. நான் உன்கிட்ட கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சறேன்.. நீ என்னடான்னா அடுத்த வீட்டுக்காரன் கையில காசைக் குடுத்து குசும்பு பண்ணறே..! நான் எவ்வளவு கஷ்டத்திலே இருக்கேன் தெரியுமா..? உனக்கு மனசாட்சியே கிடையாதா..?

கடவுள் சொன்னார்..

" மண்ணாங்கட்டி எல்லாம் எனக்கு இருக்கு.. உனக்குதான் மூளையே இல்ல.. குலுக்கலில் பரிசு விழணும்ன்னா முதல்ல சீட்டு வாங்குடா மூதேவி..!"


*******************************************************************************
நேத்து சினிமா பார்க்கும் போது அழுதுவிட்டேன்!
எந்த இடத்தில்?
உட்கார்ந்த இடத்தில்தான்

********************************************************************************
உச்சிக்குச் சென்றனர். இருவரும் கண்ணை மூடிக்கொண்டு குதிக்கத் தயாராகினர். காதலன் முதலில் குதிக்க, காதலி 'காதலுக்குக் கண்ணில்லை என்பதை உணர்ந்துவிட்டேன்' என்று கூறிக்கொண்டு பின்வாங்கி விட்டாள்.
பாதாளத்திற்குப் போய்க்கொண்டிருந்த காதலன், 'தெரியும்டீ உங்களப்பத்தி' என்று கூறிக்கொண்டு முதுகில் மறைத்து வைத்திருந்த பாராசூட்டை விரித்துக்கொண்டு பறந்தான்...

*********************************************************************************
"டாக்டர், நான் யார் பேச்சையுமே கேட்குறதில்லை"

"அதை என்னிடம் வந்து ஏன் சொல்றீங்க?"

"காது சரியா கேட்கலை; அதை சரி பண்ணுங்க டாக்டர்

******************************************************************************
--தன்னை மகா ஞானியாக கருதிக் கொண்ட ஒருவர் முல்லாவிடம் விவாதம் புரிந்து,தனது மேதாவித்தனத்தைப் பறைசாற்ற விரும்பினார்.தனது விருப்பத்தை முல்லாவிடம் தெரிவித்துக் கொண்டார் முல்லாவும் ஒப்புக்கொண்டார்.முல்லாவின் இல்லத்திலேயே ஒரு குறிப்பிட்ட நாளில் இருவரும் சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

குறிப்பிட்ட நேரத்தில் அந்த மஹா ஞானி முல்லாவின் இல்லத்திற்கு வந்தார். அனால் முல்லா வேண்டுமென்றே அந்த நேரத்தில் வேறெங்கோ சென்றுவிட்டார். வெகு நேரம் முல்லாவிற்காக காத்திருந்த ஞானி பொறுமை இழந்து எரிச்சலுடன் வெளியேற முடிவு முடிவு செய்தார்.

அப்போது ஒரு சுண்ணக் கட்டியால் முல்லாவின் வீட்டுக் கதவில் "அறிவு கெட்ட கழுதை" என்று எழுதிவிட்டு சென்றார்.அவர் சென்ற பின் முல்லா வீடு வந்து சேர்ந்தார் வாசற்கதவை பார்த்தார் தம்மோடு விவாதிக்க வந்தவர்தான் கோவத்தில் எப்படி எழுதி இருக்கிறார் என்று புரிந்து கொண்டார் .

முல்லா சிறிது நேரத்தில் அந்த ஞானியின் வீட்டிற்கு சென்றார்.அவரிடம் முல்லா "அறிஞர் பெருமானே தாங்கள் என்னை பொருத்தருள வேண்டும் தங்களை நன் வர சொன்ன நேரத்தில் வேறொரு வேலையாக வெளியே சென்று விட்டேன். வீடு திரும்பியதும் தான் தாங்கள் வந்து சென்றதை தெரிவிக்கும் வகையில் வாசற் கதவில் உங்கள் பெயரை எழுதி விட்டு சென்றதை அறிந்து தங்களிடம் மன்னிப்பு கேட்க ஓடோடி வந்தேன் "என்று அடக்கமாக கூறினார்.இதற்க்கு அந்த ஞானியால் பதில் ஏதும் கொடுக்க முடியாமல் அந்த மகா ஞானி அசடு வழிந்தார். இதுக்கு பெயர்தான் presence of mind நண்பர்களே.

********************************************************************************

No comments:

Post a Comment