Monday 28 January 2013

சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி?,தக்காளி சட்னி

 முத்திரை தியானம் கற்று வாழ்வில் உயர்வு பெற என் நண்பனை அணுகவும்
பொங்கல் தக்காளி சட்னி படத்தை தொடர்ந்து படிக்கலாம்.
சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி?
சர்க்கரை பொங்கல்
தேவையானவை :
சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி?
பச்ச அரிசி 2 கப்
பாசி பருப்பு 1/2கப்
பால் 1/2 கப்
முந்திரிப்பருப்பு 10
வெல்லம் 2 1/2 கப்
நெய் 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் 1 டீஸ்பூன்
திராட்சை 4
செய்முறை:
பாசி பருப்பை அரை ஸ்பூன் நெய் விட்டு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.சிறிது நெய்யில், முந்திரிப்பருப்பையும் , திராட்சையையும் பொன்னிறமாக வறுக்கவும். ஒரு பாத்திரத்தில் அரிசி ப‌ருப்பு ஒன்றாக‌ போட்டு 5 க‌ப் த‌ண்ணீர் + பால் சேர்த்து குக்கரில் மூடி வேகவிடவும் 4 சவுண்ட் வரணும் வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கரைந்ததும் வடிகட்டவும்.அரிசி ப‌ருப்பு வெந்த‌தும் இற‌க்கி ந‌ன்கு ம‌சிக்க‌வும்.அதில் க‌ரைத்து வைத்த‌ வெல்ல‌த்தை சேர்த்து அடுப்பில் வைத்து ந‌ன்கு கிள‌ற‌வும் கெட்டி ஆன‌தும் ஏல‌ப்பொடி வ‌றுத்து வைத்த‌ முந்திரி பருப்பு போட்டு நெய் விட்டு இற‌க்க‌வும்



தக்காளி சட்னி
*மூன்று தக்
காளி, 3 அல்லது 4 சின்ன வெங்காயம் (அல்லது ஒரு பெரிய வெங்காயம்), ஒரு பச்சை மிளகாய், ஒரு டீ ஸ்பூன் கடுகு, இரண்டு டீஸ்பூன் எண்ணெய், 4 -5 கருவேப்பிலை.
பச்சை மிளகாயை மூன்று துண்டாக நறுக்கவும். வெங்காயத்தையும் சின்ன சின்னதாக நறுக்கவும். தக்காளியை சிறு சிறு துண்டாக வெட்டிக் கொள்ளவும்.
அடுப்பை ஆன் செய்து, கடாயை வைத்து தீயை மீடியம் அளவில் வைக்கவும்.
எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகை போட்டு வெடிக்க விடவும். கடுகு வெடிக்கும்போதே கருவேப்பிலையும் சேர்த்துவிடவும். பின்னர் பச்சை மிளகாயை போட்டு பிரட்டி விடவும்
நறுக்கிய தக்காளியை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். வெங்காயம் வெந்து கண்ணாடி போல தெரியும்போது அரைத்த தக்காளியை ஊற்றவும். 1/4 கப் தண்ணீரை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அலாசி அதையும் ஊற்றவும்.
கடாயை மூடி போட்டு மூடி விடவும். 5 நிமிடம் சரியாக கம்மி தீயிலேயெ கொதிக்க விடவும். உப்பு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சரி பார்க்கவும்.

 

No comments:

Post a Comment