Friday 1 March 2013

ஓம் எனும் மந்திரத்தை


ஓம் எனும் மந்திரத்தை சொல்வது ஏன்?
 பாரத மக்களால் பக்தியுடன் உச்சரிக்கப்படும் மந்திரம்-ஓம் இது, உச்சரிப்பவர்களின் மனதிற்கும், உடலுக்கும் அவர்களின் சுற்றுச்சூழலிலும் அமைதியை ஏற்படுத்துவதோடு, நன்மை தரும் மின்னலையும் உண்டாக்குகிறது. பெரும்பாலான மந்திரங்களும், வேதப் பிரார்த்தனைகளும் ஓம் என்ற ஒளியுடன் தான் தொடங்குகின்றன. மங்கள நிகழ்ச்சிகளும் ஓம் என்ற ஒலியுடனே தொடங்கப்படுகின்றன. ஒருவரை வரவேற்கும்போது ஓம் என்றோ ஹரிஓம் என்றோ கூறி வரவேற்பது ஒரு காலத்தில் நம் நாட்டில் வழக்கிலிருந்தது. தியானம் செய்யும்பொழுது ஓம் எனும் மந்திரமே மனதுக்குள் உச்சரிக்கப்படுகிறது. ஓம் எனும் எழுத்து வடிவமும் பக்தியுடன் வணங்கப்படுகிறது. ஓம்- ஒரு மங்களச் சின்னமாகப் போற்றப்படுகிறது. ஓம் என்பது இறைவனின் பொதுப் பெயர். இச்சொல் அ+உ+ம என்ற மூன்றெழுத்துகளால் ஆனது ஆ எனும் ஒலி நம் தொண்டையின் அடிப்பாகத்தில் உள்ள குரல் நாண்களிலிருந்து தோன்றுகிறது. உதடுகளைக் குவித்து உ சொல்லப்படுகிறது. உதடுகள் சேரும்போது ம எனும் ஒலியில் அது முடிவடைகிறது. இந்த மூன்று எழுத்துகளும் விழிப்பு நிலை, கனவு நிலை மற்றும் ஆழ்ந்த உறக்க நிலை ஆகிய மூன்று நிலைகளையும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களையும் ரிக், யஜுர் மற்றும் சாம என்ற மூன்று வேதங்களையும் பூ, புவஹ, சுவஹ என்ற மூன்று உலகங்களையும் குறிக்கின்றன.

இறைவன் இவை அனைத்துமாக, இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டவனாக விளங்குகிறான். இறைவன் (பிரம்மம்) உருவமற்றவன்; குணங்களற்றவன். ஓம் எனும் மந்திரத்தை உச்சரிக்கையில் இரண்டு ஓம் ஒலிகளுக்கிடையில் நிலவும் நிசப்தம் இறைவனைக் குறிக்கிறது. ஓம் பிரணவம் என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது, இறைவனின் மகிமையைக் குறிக்கும் ஒலி அல்லது ஒலி வடிவம்! வேதங்களின் சாரம் அனைத்தும் ஓம் என்ற மந்திரத்தில் அடங்கியுள்ளன. இறைவன் ஓம் அத: என்ற ஒலிகளை எழுப்பிய பிறகே சிருஷ்டியைத் தொடங்கினான் என்று கூறப்படுகிறது. எனவேதான் எந்த ஒரு வேலையைத் தொடங்கவதற்கு முன்பும் ஓம் என்று கூறுவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. ஓம் என்று கூறும்பொழுது எழும் ஓசை ஒரு மணியின் ஓசை போல் எதிரொலிக்க வேண்டும். அந்த ஒலி மனதை அமைதியில் ஆழ்த்தி ஒருமுகப்படுத்துகிறது. மனம் இந்த நுட்பமான ஒலியால் மூழ்கடிக்கப்படுகிறது. ஞானத்தை நாடுபவர்கள் ஓம் எனும் மந்திரத்தின் ஆழ்ந்த கருத்தில் மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்து முக்தியடைகின்றனர். ஓம் பலவிதமாக எழுதப்படுகிறது. பொதுவாக எங்கும் பயன்படுத்தும் வடிவம் விநாயகரைக் குறிக்கிறது. ஓம் என்ற எழுத்தின் மேல் உள்ள வளைவு தலையையும், அடிப்பாகம் வயிறையும், பக்கத்தில் உள்ள வளைவு துதிக்கைகளையும் குறிக்கின்றன. புள்ளிடன் கூடி அரைவட்டம் விநாயகரின் கையையும் அதில் உள்ள மோதகத்தையும் குறிக்கிறது. இவ்வாறு ஓம் வாழ்க்கையின் லட்சியம். அதனை அடையும் வழி, படைக்கப்பட்ட உலகம், படைப்பின் பின்னே உள்ள பேருண்மை, புனிதமான மற்றும் உலகாயதமான பொருட்கள், உருவமுள்ளவை, உருவமற்றவை ஆகிய அனைத்தையும் குறிப்பதாக உள்ளது.
*************************************************
ஓம் என்று செபிப்பவனைப் பக்தன் என்போம்
    உட்பொருளை உணர்ந்தவனை ஞானி என்போம்.
    மகரிஷி
    வேதாத்திரி மகரிஷி.
****************************************
//"ஓம் பூர்ண மதஹ் பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே பூர்ணஸ்ய பூர்ணமாதாய
    பூர்ணமே வா வசிஷ்யதே'.//

    "அங்கிருப்பதும் பூரணம்; இங்கிருப்பதும் பூரணம். பூரணத்திலிருந்து பூரணம் உண்டாகி யுள்ளது. பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்த பின்பும் மிஞ்சி நிற்பதும் பூரணமே' என்பது மேற்சொன்ன சுலோகத்தின் பொருள். பூரணத்தைப் பிரித்தால்கூட அதுவும் பூரணமாகவே இருக்கும். ஆக பரம்பொருள் பூரணமானது; அதன் ஒரு சிறு பகுதியும் பூரணமே.//
*******************************************************************
ஓம் காரத்தை 'அ..உ..ம்' என்று உச்சரிப்பதே சரி. அதில் "அ" உச்சரிப்பு அடிவயிற்றில் இருந்து சப்தமாக வெளிவர வேண்டும், "உ" உச்சரிப்பு சப்தமாக அடிவயிற்றைக் கடந்து நெஞ்சுக்கூட்டுக்கும் அடிவயிற்றிற்கும் இடையில அதிர்வை ஏற்படுத்த வேண்டும், "ம்" சப்தமானது வயிற்றில் ஏற்பட்ட அதிர்வு மூக்கு நுனியில் முடியுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதுவே சரியான ஓம் கார உச்சரிப்புமுறை என்று பல ஆன்மிக குருமார்களும் தெரிவிக்கின்றனர்.
********************************************************************************
 இரு காதுகளை மூடிக்கொன்டு எமக்குள்லிருந்து வரும் சத்தத்தை அவதானித்தால் அதுவும் ஓம்காரம்தான்  அதேபோல கடற்கரையிலிருந்து எழும் ஓசையை அவதானித்தால் அதுவும் ஓம்காரம்தான். அதைப்போல் காடுகளின் நடுவிலீருந்து எழும் ஓசையை அவதானித்தால் அதுவும் ஓம்காரம்தான்.
***********************************************************************************************************************************

"யாராவது உடல்குன்றி வியாதியுடன் படுக்கையில் வீழ்ந்திருக்கும் போது  எதாவது பழத்தை வாங்கி அதைக்கட்டைவிரலாலும் ஆழ்காட்டிவிரலாலும் பிடித்துக்கொண்டு வலது கையினால் அதன் மேல் " ஓம் " என்று எழுதிவிட்டு
அதை 108 தட்வையோ  அல்லது 1008 தடவையோ உருவேற்றி பின் வாயால் ஊதிவிட்டு அந்தப்பழத்தை அந்த நோயளிக்கு அளிக்க 
அவர் விரைவில் குணமடைந்து விடு
வார்
******************************************************************************
3. பிரணவ சமாதி
1    தூலப் பிரணவம் சொரூப ஆனந்தப் பேர் உரை
பாலித்த சூக்கும மேலைச் சொரூபப் பெண்
ஆலித்த முத்திரை ஆம் அதில் காரணம்
மேலைப் பிரணவம் வேத அந்த வீதியே.
   

           
   
2    ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே ஒருமொழி
ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே உருவரு
ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே பல பேதம்
ஓம் எனும் ஓங்காரம் ஒண் முத்தி சித்தியே.


           
   
3    ஓங்காரத்து உள்ளே உதித்த ஐம் பூதங்கள்
ஓங்காரத்து உள்ளே உதித்த சரா சரம்
ஓங்காரா தீதத்து உயிர் மூன்றும் உற்றன
ஓங்கார சீவ பர சிவ ரூபமே.
***********************************************************************************