Friday, 28 December 2012

comedy sto


  • FACEBOOKல அதிக நண்பர்கள வைச்சிருக்கிறது யாருனு ஒரு கருத்து கணிப்பு வைச்சா  SHAALU KUTTY(CHELLA KUTTY), SMILE SWATHY, KU.SU(KUMARASWAAMY SUGUNA),  AWESOME AANNI(ANNAPOORNAA). (என்னடா புரியாத பாசைல திட்டுறான்னு நினைக்காதீங்க இதெல்லாம் முகப்புத்தகத்தில TAMIL பொண்ணுங்கட நேம்னா பாருங்களன்....) இவங்க தான் முண்ண்ணியில இருக்கினம்.....
    ஏன் இப்பூடி நடக்குது????

    ”சில அனுபவ ஆராய்ச்சி முடிவுகள்”--

    இவங்க பத்தி சொல்லணும்... முதல்ல இவங்க PROFILE PHOTO எப்டி இருக்கும்னா சின்ன வயசில பலூன் ஊதுற போட்டோ, 6 மாச குழந்தையா இருக்கேக்க எடுத்த போட்டோ, பல்லு கொளுக்கட்டை போட்டோ, NURSARY FANCY DRESS PHOTOனு இருக்கும்.. அதாவது  அழகா இருந்த(இப்ப மொக்கை தானே) படங்களை போட( நானும் சின்ன வயசில அழகன் தான் இப்ப தான் அப்புறம் தெரியும் தானே…).  

    அதுக்கு நம்ம பொடியங்கள் போடுவாங்களே கொமண்ட் “உங்க பல்லு ரெம்ப அழகா இருக்கு”  அதுக்கு இழிச்சுக்கிட்டே 7 பேர் லைக் பண்ணுவாங்க...  அப்புறம் இடைல ஒரு வெங்காயம் :P, LOL, NICE, AWESOME, இப்பூடியே 100 கொமண்ட் வந்திடும்... பட் அவள் கண்டுக்கவே மாட்டாள்....  (2 தலை முடி, வர்ணம் பூசிய 5 விரல், காது, மூக்கு கண்ணாடி ”என்னடா ஏதாவது சூனியம் செய்ய போறானா”ன்னு பயப்படாதீங்க இது கூட இவங்க தான்  PROFILE PHOTO  தான்,,)

    என்ன பண்ணுவாங்கள்னா நாம ரிக்குவஸ்ட் போட்டம்னு வைங்களேன் (எனக்கு பொண்ணுங்க தான் போடுவாங்க நாமன்னு சொன்னது உங்கள ஓகே).... ஒவ்வொரு நாளும் பாத்திட்டு 2 கிழமை களிச்சு அட் பண்ணுவா...... எல்லா பொண்ணுங்களையும் நான் இங்கு குறிப்பிடல.( என்ன செய்ய இருக்கிற ஒண்டு ரெண்டு பொண்ணுங்களும் இத பார்த்து என்ன ரிமூவ் பண்ணினா அதுக்கு தான் இந்த வாளி).  
    சரி ”சாட்”பண்ணலாம்னு ”ஹாய்” போட்டா ஓஃப் லைன்க்கு போய்டுவா.... சரி மெசேஜ் போட்டா ரிமூவ் பண்ணிடுவா....   

    இது  FACEBOOKLA மட்டும் இல்ல சும்மா ஒரு பொண்ணுக்கு CALL  எடுக்குறீங்கனு வையுங்களேன் கைல போன் இருந்தாலும் 57வது செக்கன் தான் ரிசீவ் பண்ணுவாங்க இந்த பொண்ணுங்க... ( இதுக்கப்புறம் எத்தனை ரிசீவ் கால் மிஸ்ட் கால் ஆக போகுதோ.......)

    அப்புறம் நாம என்ன சரி நம்ம பையனோட ”சாட்” பண்ணுவம்னு ”ஹாய்” போட்டா ரீப்லையே வராது ஏன்னு கேட்டா மச்சான் ஒன்லைன்ல பிகருடா அதான் எண்டு அசடு வழிவான்...( அவனுக்கு தெரியாது அந்த பிகரு நான் தான்னு அதான் FAKE ங்க…..)

    பொண்ணுங்க ஜஸ்ட் ஒரு போஸ்ட் போட்டா நாம லைக் பண்ணுவம்....FACEBOOK’ன் 3ம் விதி படி அவ என்ன பண்ணணும் எங்க போஸ்ட்டையும் லைக் பண்ண்ணும்...
    அவ லைக் பண்ண மாட்டா எப்ப பண்ணுவானா நாம மொத்தமா அவட போஸ்ட்டுக்கு 8 கொமண்டும், 20 லைக்கும் பண்ணினப்பிறகு தான் எங்கட போஸ்ட் ஒண்ட லைக் பண்ணுவா...

    அதுக்கப்புறம் அவ என்ன பண்ணுவானா BEST FRIENDS னு ஒரு ரிப்போர்ட்ட டாக் பண்ணுவான்.... அதுல முதல் பத்துக்குள்ளா நம்ம பசங்க தான் இருப்பாங்க... இவன் என்ன பண்ணுவான்னா.... நான் FIRST னு ஒரு கமண்டு அடிக்க கீழ நான் செக்கண்ட், தேர்ட்னு போகும்..... இத பாக்கிற எங்களுக்கு மண்டைக்கிளால போகும்.......

    சரி எப்பவாது இருந்துட்டு ஒருத்தி நம்ம போஸ்ட்டுக்கு கொமண்ட் போடுவா... நம்ம பசங்களுக்கு பொறுக்காதே..( எனக்கும் அப்டிதான்)...
    அடுத்தா நம்ம பசங்க  “யாருடா இவ சொல்லவே இல்ல? IROSHAN PUVIRAJ ஆ ஆ நடக்கட்டும்”னு ஒரு குண்டையே கொமண்டா போடுவாங்க இதுக்கப்புறம் அவ எப்டிடா???????? புரியுது தானே எங்க பீலிங்கு.......
    ஒரு விசயம் கட்டாயம் சொல்லணும் நம்ம பொடியங்கள் முகப்புத்தகத்தில நிறையவே ஏமாறுறாங்க எப்டினா??
    1.பொண்ணுங்க பேரில ACCOUNT வைச்சி இருக்கிற பொடியங்களோட ”சாட்” பண்ணி நோண்டி ஆகிறாங்க..
    2. ப்ரொஃபைல் போட்டோ பாத்து அழகான பொண்ணுனு நினைச்சு பசங்கள லவ் பண்றாங்க..(என்ன கூட நிறைய பேர் லவ் பண்ணி இருக்காங்க, லவ் பண்றாங்க......)

    இப்பூடியெல்லாம் இருக்கூனு சொல்லுறேங்க அவ்வளவுதான்........
    இதுக்கப்புறமாவது ஏதாவது நல்ல விசயம் நடக்குனு நினைக்குறன்.......
    இது யார் மனசையும் புண்படுத்தி இருப்பின் என்னை ரிமூவ் பண்ணி விடவும்.

    பிற்குறிப்பு- பெண்கள் இதை படித்தவுடன் மறந்து விடவும்.... முடிந்தால் லைக் பண்ணி கொமண்ட் அடிக்கவும்..(LOLZ……..:))

    தாக்கமும் ஆக்கமும் இடியட் இரோஷ்.......(IROSHAN PUVIRAJ)

No comments:

Post a Comment